மீனவ கிராமங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆய்வு

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்

Update: 2022-12-10 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம், மற்றும் பழையார், மடவாமேடு, ஓல கொட்டாயமேடு, சின்ன கொட்டாயமேடு, தொடுவாய், கூழையார், திருமுல்லைவாசல் ஆகிய மீனவ கிராமங்கள் மாண்டஸ் புயல் காரணமாக கடற் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளிட்ட கிராமங்களுக்கு கடல்நீர் புகுந்தது. இதை தொடர்ந்து இந்த பகுதி மக்களை கிராம மக்கள் புயல் பாதுகாப்பு மையம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை பணிகளைசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இ்ந்த ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் பூர்ண சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் காமராஜ், மூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்