முருகன் கோவில்களில் பங்குனி உத்திர வழிபாடு

பங்குனி உத்திரத்தையொட்டி நீடாமங்கலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-04-05 18:45 GMT

நீடாமங்கலம்:

பங்குனி உத்திரத்தையொட்டி நீடாமங்கலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பங்குனி உத்திரம்

நீடாமங்கலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பங்குனி உத்திர வழிபாடு நடைபெற்றது. இ்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சிறப்பு வழிபாடு

இதேபோல் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் நடந்த பங்குனி உத்திர வழிபாட்டில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், காசிவிசுவநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்