எஸ்.புதூர் பகுதிகளில் பங்குனி பொங்கல் திருவிழா

எஸ்.புதூர் பகுதிகளில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-09 18:45 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, தர்மபட்டி, கிழவயல், குளத்துப்பட்டி, அரியாண்டிபட்டி, குறும்பலூர், படமிஞ்சி, மேலவண்ணாரிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டிய நாள் முதல் அந்தந்த ஊர் கோவில் முன்பாக பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் வைந்தானை அடித்து வழிபாடு செய்தும் வழிபாடு நடத்தினர். காப்பு கட்டிய 8-வது நாள் பங்குனி பொங்கல் திருவிழா அன்று கிடாய் வெட்டியும், சேவல் அறுத்தும் பொங்கல் வைத்தனர். வெயில் காலங்களில் ஏற்படும் அம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க வீட்டு வாசல்படிகளில் பூவுடன் கூடிய வேப்பிலை தோரணம் கட்டியும், நீர்மோர், பானகம், கொழுக்கட்டை வைத்தும் சாமி கும்பிட்டனர். தொடர்ந்து 9-ம் நாளான இன்று கொழுக்கட்டை, வைந்தானை குச்சி எறிதல், மாறுவேடமணிந்து நேர்த்தி கடன் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிழைப்புக்காக வெளியூர் சென்ற பொதுமக்கள் இந்த பங்குனி பொங்கல் திருவிழாவில் ஒன்றுகூடி வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்