பஞ்சாயத்துராஜ் அதிகாரங்களை ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும்

பஞ்சாயத்துராஜ் அதிகாரங்களை ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-24 18:07 GMT

கே.வி.குப்பம் அடுத்த சேத்துவண்டையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாகல் என்.பாலா தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் இமகிரிபாபு, ராகேஷ், சிவகுமார், பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாலட்சுமி சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு, பேரணாம்பட்டு ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பஞ்சாயத்துராஜ் அதிகாரங்களை அதிகாரிகளிடம் இருந்து மீட்டு ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியம் ரூ.30 ஆயிரம், ஓய்வு ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும். பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தை ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கே வழங்க வேண்டும்.

பட்டியல் இன தலைவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எஸ்.வி.கே.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வி.ஏ.சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்