ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-12 19:07 GMT

ஆற்காடு ஒன்றியம் பூட்டுத்தாக்கு ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அருண் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்தநிலையில் பூட்டுத்தாக்கு ஊராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சிதுறையை கண்டித்தும், கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக் கோரியும் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு வாசுதேவன், சுதாகர், சித்ரா ஜெகதீசன், பேபி பார்த்தீபன் ஆகிய 4 வார்டு உறுப்பினர்கள் நேற்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் நேற்று பூட்டு தாக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அருண் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உண்ணா விரதத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்