ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைத்தலைவர், உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

Update: 2022-08-18 18:06 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சேட்டு. இவர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள், 100 நாள் வேலை திட்டப் பணிகள, உள்ளிட்ட அடிப்படை பணிகள் எதையும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், இதனால் ஊராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளதாகவும் கூறி அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் மீது மாவட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சாத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோ தலைமையில் உறுப்பினர்கள் சுதாகர், குருநாதன், கம்சலா, தெய்வானை, கலைவாணி, வசந்தி, ஆகியோர் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். மேலும் சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்