ஊராட்சி மன்ற செயலாளர்கள் கூட்டம்

உடன்குடியில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-12 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி யூனியனில் உள்ள 17 ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்க கூட்டம், தலைவர் (பொறுப்பு) கணேசன் தலைமையில் உடன்குடியில் நடந்தது. இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் சித்திரைவேல், செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் வயோலா சாந்தகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய வெள்ளான்விளை செயலாளர் ராஜலிங்கம், சிறுநாடார்குடியிருப்பு செயலாளர் சித்திரைவேல் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் அப்துல் ரசாக், அந்தோணிபவுல், சிவகுமார், பொன் மாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்