ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-24 16:35 GMT


கலசபாக்கம் தாலுகா சிறுவள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவள்ளூர் ஊராட்சியில் பணியாற்றிய செயலாளர் வேறு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டால் மிரட்டுகிறார்.

அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதற்கான தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து வைத்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்