ஆதிநாத பகவான் திகம்பர் கோவிலில் பஞ்ச கல்யாண விழா

சேவூர் கிராமத்தில் ஆதிநாத பகவான் திகம்பர் கோவிலில் பஞ்ச கல்யாண விழா நடந்தது.

Update: 2023-05-11 11:39 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிநாத பகவான் திகம்பர் ஜினாலய கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு பிரதிஷ்டை பெருவிழா நடந்தது.

இதைத்தொடர்ந்து பஞ்ச கல்யாண பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

விழாவையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜெயின் சமூகத்தினர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு யானை மீதும், குதிரை சாரட் வண்டிகளிலும், குதிரை மீதும், புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்களுடன் ரகுநாதபுரம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பேண்டு வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

பெண்கள் கோலாட்டமும், ஆதிபகவான் சுவாமி குறித்து கோஷங்கள் எழுப்பியும் ஊர்வலமாக சென்றனர். பின்னர் மேல்சீத்தாமூர் ஜினகஞ்சி ஜனமடம் லட்சுமி பட்டாரக சுவாமிகள், இளைய பட்டா ரக சுவாமிகள், திருமலை தவளகீர்த்தி சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு கலச புனித நீரை திகம்பருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை (வெள்ளிக்கிழமை) ஜெயின் சமூக பக்தி சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிய நடைபெறுகிறது. இரவு ஆதிபகவான் திகம்பர் திருவீதி உலா நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதிநாத பகவான் ஜெயின் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் மன்ற பொறுப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்