20 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
20 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
இளையான்குடி,
இளையான்குடியில் கண்மாய்கள், குளங்கள், நெடுஞ்சாலைத்துறை சாலைகள் ஓரம் 20 ஆயிரம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி இளையான்குடியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதையொட்டி 200 மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு கலெக்டர், பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சுகிதா, இளையான்குடி தாசில்தார் அசோக்குமார், நீர்ப்பாசன குழு தலைவர் முகமது அலி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியராஜன், தோட்டக்கலை அலுவலர் தனராஜ், தோட்டக்கலை உதவி அலுவலர் ஜெகதீஷ், சின்னையா நடராஜன், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பனை விதைகள், மரக்கன்றுகளை நட்டனர்.