பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
கோவில்பட்டியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் தினவிழாவையொட்டி பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. சேவா சங்க நிறுவனர் பி.கே.நாகராஜன் தலைமை தாங்கினார். கோவில் பட்டிவேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாயில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பனை விதைகளை நட்டினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தாமோதரன், கிளைச் செயலாளர் நல்லவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.