பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பந்துவார்பட்டி குளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.;
அர்ப்பணம் மது போதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் சார்பில், ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பந்துவார்பட்டி குளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். அர்ப்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மைய இயக்குனர்கள் சதீஷ், வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் குளத்து கரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசுத் துறை அதிகாரிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.