பள்ளிசெல்லா- இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு
பள்ளிசெல்லா- இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு;
நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோனாப்பேட்டை பஞ்சாயத்தில் உள்ள செட்டிச்சத்திரம், சோனாப்பேட்டை குடியிருப்பில் பள்ளிசெல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளின் கணக்கெடுப்பு வட்டார வள மையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் இளையராஜா, வேலுசாமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு கணக்கெடுப்பு நடத்தி 10-ம் வகுப்பு படித்து இடைநின்ற மாணவிகள் 2 பேரை 11-ம் வகுப்பில் சேர்த்தனர். இந்த மாணவிகளுக்கு எடமேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாகுமாரி நலத்திட்டங்களையும், புத்தகங்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா செய்து இருந்தார். அதேபோல் 8-ம் வகுப்பு படித்து இடைநின்ற மாணவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.