நவ திருப்பதி கோவில்களில்பகல்பத்து விழா தொடங்கியது
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவ திருப்பதி கோவில்களில் பகல்பத்து விழா தொடங்கியது.
தென்திருப்பேரை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவ திருப்பதி கோவில்களில் பகல்பத்து விழா தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவத்திருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் ஆகிய கோவில்களில் நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு கோவில் மண்டபத்தில் உற்சவ பெருமாள்கள் புஷ்ப அலங்காரத்துடன் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து திருப்பல்லாண்டு ஆரம்பம் மற்றும் அருளிப்பாடு சேவித்தல் நடைபெற்றது.
சயன கோலத்தில் பெருமாள்
முதல் 10 நாள் திருமொழி திருநாளாகவும், ஜனவரி 2-ந் தேதி தொடங்கும் விழா திருவாய்மொழி திருநாளாகவும் ஒவ்வொரு நாளும் உற்சவ பெருமாள் அந்தந்த கோவில்களில் உள்ள முன் மண்டபத்தில் எழுந்தருளி அருளிப்பாடு சேவித்தல் நடைபெறும். 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும்.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் பெருமாள் சயன திருக்கோலத்தில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 10 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தக்கார்கள் செய்து வருகின்றனர்.