மகா முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
மகா முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
திருச்சி, ஒத்தக்கடை புதுத்தெருவில் உள்ள சக்தி வலம்புரி விநாயகர், மீனாட்சி சுந்தரேசர் சமேத தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, ஒண்டிக்கருப்பு, மகாமுத்து மாரியம்மன் கோவிலில் 30-ம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி குத்துவிளக்கு பூஜை, பூச்சொரிதல் மற்றும் தேர்பவனி நடந்தது. இந்நிலையில் நேற்று காலை காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, இளநீர் காவடி எடுத்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானமும், இரவில் மஞ்சள் நீராட்டு மற்றும் குட்டிகுடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.