போலீசாரின் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி

போலீசாரின் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

Update: 2022-11-13 18:26 GMT

குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் துறையில் ஆயுதப்படை போலீஸ் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாரின் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி புதுக்கோட்டையில் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையும், 5 முதல் 8-ம் வகுப்பு வரையும் என மொத்தம் 2 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலான போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அர்ஷியா நவுஷ்வீன், ரக்ஷிதா, துவாரகா ஆகியோருக்கும், 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சஹானா, பிரகதி, ஆராதனா ஆகியோருக்கு பரிசுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்