திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பெயிண்டர்

விஷம் குடித்துவிட்டதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பெயிண்டர், டாக்டர்களிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-03 17:06 GMT

டாக்டர்களிடம் ரகளை

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தள்ளாடியபடி வந்தார். பின்னர் அங்குள்ள டாக்டர்களிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் உடனே அவருக்கு சிகிச்சை கொடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்து அந்த நபர் ரகளையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் திண்டுக்கல் ஒய்.எம். ஆர். பட்டியை சேர்ந்த பெயிண்டர் செபாஸ்டின் விமல்ராஜ் (வயது 43) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெயிண்டர்

விசாரணையில் தனக்கும், உறவினர்களுக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கும், எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன் என போலீசாரிடம் செபாஸ்டின் விமல்ராஜ் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி தன்னிடம் தகராறில் ஈடுபடும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை சிகிச்சை எடுத்துக்கொள்ளமாட்டேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவருடைய புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள செபாஸ்டின் விமல்ராஜ் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவர் விஷம் குடித்தாரா? இல்லையா? என பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்தனர். அரசு மருத்துவமனையில் பெயிண்டர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்