மேல்மலையனூர் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

மேல்மலையனூர் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-22 18:45 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே சிந்தகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ராஜீவ் காந்தி (வயது 39). சென்னையில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ந் தேதி சென்னையிலிருந்து சொந்த ஊரான சிந்தகம்பூண்டிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளத்தி போலீசார் ராஜீவ் காந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ் காந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்