பெயிண்டர் பலி

பெயிண்டர் பலி

Update: 2023-07-21 20:06 GMT

தஞ்சையை அடுத்த கீழஉளுர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தஞ்சைக்கு வந்த இவர் மீண்டும் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். துறையுண்டார் கோட்டை பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்