வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பெயிண்டர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பெயிண்டர் கைது

Update: 2022-12-28 18:45 GMT

கோவை

கோவை கடைவீதி அய்யாசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 21). தனியார் ஊழியர். இவர் நேற்று கெம்பட்டி காலனி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டினார்.

அவர் கொடுக்க மறுத்ததால் கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 300 ரூபாயை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து கார்த்திகேயன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்தி முனையில் பணம், செல்போன் பறித்தது கெம்பட்டி காலனியை சேர்ந்த பெயிண்டர் அங்குராஜ் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்துதனர்.

Tags:    

மேலும் செய்திகள்