படுக்கப்பத்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
படுக்கப்பத்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் யூனியன் படுக்கப்பத்து சன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு தரப்பில் இருந்து 16 அணிகள் கலந்துகொண்டன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த அணிக்கு, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை, சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி வழங்கினார். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் படுக்கப்பத்து பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி சரவணன், தொழில் அதிபர் ராமநாதன் ஆதித்தன், கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.