நீலகிரி மாவட்டத்தில் படுகுநாடு அமைப்பு மீண்டும் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் படுகுநாடு அமைப்பு மீண்டும் தொடக்கம்

Update: 2023-02-05 18:45 GMT

ஊட்டி

1989-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகசமுதாய தலைவர்களால் உருவாக்கப்பட்ட படுகு நாடு சமூக சேவை அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. ஊட்டியில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- கடந்த சில காலங்களாக சமூக வலைதளங்களில் இன்றைய இளைஞர்கள் படுகு நாடு சமூக சேவை அமைப்பின் கடந்தகால சாதனை களையும் செயல்பாடுகளையும் வாழ்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அமைப்பு மீண்டும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை இளைஞர்களிடையே தொடர்ந்து கோரிக்கையாக வந்து கொண்டே இருப்பதால் மீண்டும் படுகு நாடு சமூக சேவை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வாழும் வசதியற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கு உதவும் வகையிலும் விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தேவையான உதவிகள் இலவச மருத்துவ சேவைகள் செய்து கொடுப்பதுடன் கலை துறையில், நாடகம், இசை போன்ற கலை துறையில் ஈடுபாடுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத் துவது முக்கிய நோக்கமாகும். மேலும் சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை தொலைநோக்கு பார்வையில் தீர்ப்பது போன்ற முக்கிய தீர்மானங்களுடன் தொடங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்