விஜயகாந்திற்கு மே 9-ந்தேதி பத்ம பூஷன் விருது: பிரேமலதா பேட்டி

விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது என பிரேமலதா கூறினார்

Update: 2024-04-28 09:11 GMT

 சென்னை:

சென்னையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

3 நாட்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டெல்லி செல்ல உள்ளோம்.

வெயில் காரணமாக பள்ளிகளை ஒருவாரம் தள்ளி திறக்க வேண்டும்.விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் ஒரு மாதம் தங்கியிருந்து எல்லா கிராமங்களுக்கும் நேரடியாக சென்ற வேட்பாளர். எல்லா ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். அவருக்கு கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை தருவோம் என்று பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் அனைவரும் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்ததாக கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்