1000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு- கலெக்டர்
1000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.
தஞ்சை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தண்ணீர் வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
தஞ்சையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. உடனடியாக தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.