நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியலும் ஈடுபட்டனர்.

Update: 2022-10-22 18:53 GMT

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பருவ கால ஊழியர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு அரசு அறிவித்த தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் தொடர்ந்து சித்தர்காடு நவீன அரிசி ஆலை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பொன்.நக்கீரன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனே போனஸ் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த மறியலால் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்