படபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவாடானை அருகே படபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

Update: 2023-05-22 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தில் படபத்ர காளியம்மன், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதனையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் யாக வேள்விகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கருவறையில் அம்மனுக்கு மகா அபிஷேகமும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. அதனைத் தொடர்ந்து படபத்ரகாளி அம்மன், முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன் பின்னர் அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்