சேதமடைந்த நிலையில் உணவு பொருட்களின் மூட்டைகள்

சேதமடைந்த நிலையில் உணவு பொருட்களின் மூட்டைகள் வருவதாக ரேஷன் கடை ஊழியர் தெரிவித்தனர்.

Update: 2022-12-03 19:40 GMT

ரேஷன் கடை விற்பனையாளர்களில் சிலர் கூறுகையில், ரேஷன் கடைகளுக்கு வந்து இறங்கும் உணவு பொருட்களின் மூட்டைகள் சில சேதமடைந்து வருகிறது. சர்க்கரை கட்டி, கட்டியாக உள்ளது. கூட்டுறவு பண்டக சாலை மூலம் வினியோகிக்கப்படும் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க வேண்டும் என்று எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடுகின்றனர். அதனை நாங்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் விற்கும்போது, அரசே கட்டாயப்படுத்தி பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று கூறி, அதனை சிலர் வாங்க மறுப்பதால் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் நாங்கள் மத்தளம் போன்று, அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சு கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கூட்டுறவுத்துறையின் கீழ் ரேஷன் கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு பணியிட மாறுதலுக்கும், பதவி உயர்வுக்கும் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பவும் பணம் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சிலர் பதவி உயர்வு பெற்றும், சிலர் அந்த பணி கிடைக்காமல் ஏற்கனவே பணியாற்றிய பணியிடத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது, என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்