ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ப.சிதம்பரம் மரியாதை

ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2023-08-20 18:46 GMT

காரைக்குடி

ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ராஜீவ்காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி ப..சிதம்பரம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ., நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, மாநில வக்கீல் பிரிவு மாநில இணைச்செயலாளர் ராமநாதன், சாக்கோட்டை வட்டார தலைவர் கருப்பையா, நகர்மன்ற உறுப்பினர்கள் ரெத்தினம், அமுதா, அஞ்சலி தேவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் குமரேசன், சண்முகதாஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன்குமார், மகளிர் காங்கிரஸ் நகர தலைவி கலா, நகர செயலாளர் ரெயில்வே தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை

தேவகோட்டையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தேவகோட்டை நகர காங்கிரஸ் (கிழக்கு) தலைவர் வக்கீல் சஞ்சய் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, பூமிநாதன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தேவகோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த இளங்குடி முத்துக்குமார், பேராட்டுக்கோட்டை இளஞ்சேரன், தேவகோட்டை நகர காங்கிரஸ் வீரமணி, சங்கர், காளீஸ்வரன், சண்முகநாதபுரம் ஊராட்சி தலைவர் ராமலெட்சுமி ரங்கையா, தி.மு.க.வைச் சேர்ந்த ஜாஹிர் உசேன், ஜாபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்