சாலையில் சுற்றிய 3 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றிய 3 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2023-08-19 20:15 GMT

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க, அதிகாரிகளை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினர் வாரந்தோறும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி, சவுராஷ்டிராபுரம், ரவுண்டுரோடு போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 3 மாடுகளை அதிகாரிகள் பிடித்து, சரக்கு வாகனத்தில் ஏற்றி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்து நேரில் வரவழைத்து ஒவ்வொரு மாட்டுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்ததோடு, எச்சரித்து அனுப்பினர்.

இதன்மூலம் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 40 மாடுகள் பிடிக்கப்பட்டு உள்ளன. இதற்காக மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்