அதிக பாரம் ஏற்றிய லாரிகள் சிறைபிடிப்பு

நாங்குநேரி அருகே அதிக பாரம் ஏற்றிய லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

Update: 2022-09-08 22:40 GMT

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலையில் தினமும் அதிக கற்கள் ஏற்றிய கனரக லாரிகள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூலைக்கரைப்பட்டி-நாங்குநேரி சாலையில் உன்னங்குளம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழக நாங்குநேரி ஒன்றிய தலைவர் தேவேந்திர சுதாகர் தலைமையில் ஏராளமானவர்கள் அந்த வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, மூலைக்கரைப்பட்டி போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த லாரிகளை நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்