ரூ.12½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரேஷன் கடை

ரூ.12½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரேஷன் கடை கட்டும்பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-17 17:52 GMT

கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்கிநாயக்கன்பட்டி, ஜல்லியூர் பகுதிகளில் புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மற்றும் புதிய ரேஷன் கடை வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நல்லதம்பி எம்.எல்.ஏ. 15-வது நிதிக்குழு மானியம் நிதியிலிருந்துரூ ரூ.7½ லட்சம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி லக்கிநாயக்கன்பட்டியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஜல்லியூரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆத்மா தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனுசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கே.சாந்தகுமார் வரவேற்றார். புதிய கட்டிட பணிகளுக்கு ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன் ஆ௳ியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ. மோகன்ராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் ஜி.மோகன் குமார், ஜி. சுப்பிரமணி, சி.ஏகாம்பரம், ஏ.தவ்லத்பாஷா, என்.ரவி, சம்பத், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்