ரூ.19 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
சித்தேரி ஊராட்சியில் ரூ.19 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம் சித்தேரி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதாகவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் பேரில், ஒன்றியத்தின் 15-வது நிதி குழு மானியத்தில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், சண்முகம், சின்னப்பா, முகமது அப்துல் ரகுமான் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.