ரூ.18 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

நாகவேடு கிராமத்தில் ரூ.18 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2023-07-06 18:00 GMT

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகவேடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய 15-வது நிதி குழு மானிய நிதியிலிருந்து, ரூ.18 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக் குழு துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்