4 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி
சத்துவாச்சாரியில் உள்ள 4 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது.
வேலூர் சத்துவாச்சாரியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் உள்ளதாகவும், சாலையில் உள்ள மண் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் 24 வார்டு முதல் 27 வார்டு வரை 4 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி நேற்று நடைபெற்றது.
மாநகராட்சி 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், நகர்நல அலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர் லூர்துசாமி ஆகியோர் தலைமையில் 175 தூய்மை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சாலையின் ஓரம் இருந்த மண்ணை அகற்றுதல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவில் சாலையோரம் இருந்த சுமார் 2½ டன் மண் அகற்றப்பட்டது.