நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2022-12-11 08:53 GMT

சென்னை,

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்திய நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. ரிஷிகளும், முனிவர்களும் கவிஞர்கள் ஆவர். ஆங்கில மொழி நம்மிடமே ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளுங்கள், நமது இந்திய மொழிகளை புறந்தள்ளக் கூடாது. பிரதமர் மோடி நன்கு புரிந்து வைத்திருப்பதால் தான் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்.

நம் மொழிகள் பற்றி நமக்கு பெருமிதம் இருப்பது அவசியம். ஏனெனில் நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை. தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தைகள் இல்லை. நம் பாரத மொழிகள் உலகின் மற்ற மொழிகளை விட உயர்ந்தது, முதன்மையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உலக நாடுகள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவை தான் அணுகுகின்றன. நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, தேச ஒற்றுமைக்காகவும் கவிதை எழுதியவர் பாரதியார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்