புனித மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி தாளமுத்துநகர் புனித மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2022-09-28 18:45 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகர் புனித மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் பாதிரியார் பென்சன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. வருகிற 6-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர திருவிழா மாலை ஆராதனை, 7-ந் தேதி காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன், உதவி பங்குதந்தை வின்சென்ட் மற்றும் திருஇருதய சபை சகோதரிகள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்