மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என பெயரிட்டு அரசாணை வெளியீடு
மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என பெயரிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
கடந்த மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரையில் சர்வதேச தரத்தில், கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், 'தமிழ்ச் சமுதாயத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் அமையவுள்ள இந்த நூலகம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்கள் வரவேற்கும்' என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்நிலையில், மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என பெயரிட்டு தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.