ஓரடியம்புலம் ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

ஓரடியம்புலம் ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-06-24 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்