அதிமுக அலுவலகத்திற்கு வருவதற்கு ஓபிஎஸ்-க்கு எந்த முகாந்திரமும் இல்லை - ஜெயக்குமார்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்
சென்னை ,
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது ;
அதிமுகவின் கோயிலான தலைமை அலுவலகத்தை சூறையாடி சேதப்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே அதிமுக அலுவலகத்திற்கு வருவதற்கு ஓபிஎஸ்-க்கு எந்த முகாந்திரமும் இல்லை.ஓபிஎஸ் வருகை என்பது சட்டவிரோதம்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?.அதிமுகவின் தொண்டர்கள் ஒருவர் கூட திமுகவிற்கு செல்ல மாட்டார்கள். வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள்.ஓபிஎஸ் கட்சியின் பெயரை பயன்படுத்துவது தவறு. அவர் அதிமுகவின் உறுப்பினர் கூட இல்லை.இவ்வாறு கூறினார்.