உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 28 பேர் கைது

உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி புகழூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Update: 2023-05-08 19:03 GMT

போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

கரூர் மாவட்டம், ஆண்டிசெட்டிபாளையம் முதல் கூனம்பட்டி கரை தோட்டம் வரையிலான 110 கிலோ வாட் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் புகழூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கரூர் மாவட்ட குழு சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் போராட்டத்திற்கு முன்பே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன், தமிழக விவசாயி பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் மற்றும் குமரவேல் உள்ளிட்டரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

28 பேர் கைது

இதையடுத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் நேற்று கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

ெநாய்யல்

காத்திருப்பு போராட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலனும் பங்கேற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிைடத்தது. தகவலின்பேரில், அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், வினோதினி மற்றும் ஏராளமான போலீசார் புகழூர் தாசில்தார் அலுவலகத்திற்குள் யாரும் செல்லாதபடி இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

ஆனால் நேற்று மாலை வரை தாசில்தார் அலுவலகத்திற்கு யாரும் வரவில்லை. இரவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்