திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க தாசில்தாரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2023-02-10 18:45 GMT

திருக்கடையூர்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க தாசில்தாரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

சுற்றித்திரியும் பன்றிகள்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் பின்புறம் அருகிலும், சன்னதி தெரு, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம், மேலவீதி, கீழவீதி, கடைத்தெரு, பெருமாள்கோவில்தெரு, அபிஷேக கட்டளை, ஒடக்கரை, பிச்சகட்டளை மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

அடிக்கடி விபத்து

இங்குள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் அருகே பன்றிகள் சுற்றித்திரிவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது பன்றிகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விளைநிலங்களில் புகுந்து பயிர்களையும் பன்றிகள் சேதப்படுத்தின.

உடனே பன்றிகளை பிடிக்க வேண்டும்

எனவே திருக்கடையூர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 7-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியால் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று திருக்கடையூர் பஸ் நிலையம் பின்புறம் சுற்றித்திரியும் பன்றிகளை நேரில் பார்வையிட்டு உடனே பிடிக்க தரங்கம்பாடி தாசில்தார் புனிதாவிடம் அறிவுறுத்தினார். செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்்டருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்