கொடைக்கானலில் மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு

கொடைக்கானலில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2023-06-06 19:00 GMT

கொடைக்கானலில் அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் ரூ. 85 லட்சம் செலவில் முதலியார்புரம் தெரு பகுதியில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் அமைக்க கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிட பணிகள் முடிவடைந்தது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மகளிர் போலீஸ்நிலைய கட்டிடத்தை டி.ஜி.பி. சைலேந்திர பாபு திறந்து வைத்தார்.

பின்னர் கொடைக்கானலில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்டின் தினகரன், சுமதி, குற்றவியல் அரசு வக்கீல் குமரேசன், நகராட்சி துணைத் தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் கே.சி.எ.குரியன் ஆபிரகாம், எம்.ஸ்ரீதர், நகராட்சி கவுன்சிலர் ஆண்டவர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்