சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1¼ கோடியில் ஆய்வகம் திறப்பு
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆய்வகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சிவகாசி,
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆய்வகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஆய்வகம்
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேயர்
இந்த நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ., கலெக்டர் மேகநாதரெட்டி, சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், மேயர் சங்கீதா இன்பம், தாசில்தார் லோகநாதன், இணை இயக்குனர் முருகவேல், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் கலுசிவலிங்கம், யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர்கள் குருசாமி, சேவுகன், சூர்யா, கவுன்சிலர்கள் சபையர் ஞானசேகரன், வெயில்ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் வனராஜா, உதயசூரியன், இளைஞரணி வெங்கடேசன், மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.