பொதுமக்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை வாங்கும் மையம் திறப்பு
திருவத்திபுரம் நகராட்சியில் பொதுமக்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை வாங்கும் மையம் திறக்கப்பட்டது.
செய்யாறு
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வருகிற ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் பயனற்ற நிலையில் உள்ள பொருட்களை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்கின்ற அடிப்படையில் நெகிழி பொருட்கள், பழைய புத்தகங்கள், துணிகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை சேகரிப்பதற்காக
திருவத்திபுரம் நகராட்சி சார்பில் நகராட்சி வளாகம், நந்தீஸ்வரர் கோவில் அருகில், பஸ் நிலையம் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் என 4 இடங்களில் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நகராட்சி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேகரிப்பு மையத்தை நகரமன்றத் தலைவர் ஆ.மோகனவேல் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கே.விஸ்வநாதன், மணிவண்ணன், துப்புரவு ஆய்வாளர் கு.மதனராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.