ஊத்துக்கோட்டை அருகே நீர் நிலைகளை எம்.எல்.ஏ. ஆய்வு

ஊத்துக்கோட்டை அருகே நீர் நிலைகளை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. நேற்று தடுப்பு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-11-03 10:23 GMT

ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதற்கிடையே ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றுக்கு அருகே உள்ள ஓடைகளின் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றப்பாக்கத்தில் ஆரணி ஆற்றில் உள்ள தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் நேற்று தடுப்பு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தி.மு.க. தலைமை கழக செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் கலாதரன், வார்டு கவுன்சிலர்கள் கோகுல கிருஷ்ணன், கோல்ட் மணி, இந்துமதிகோகுல், சுமலதா நரேஷ், ஜீவா, சமீமா ரஹீம், கல்பனாபார்த்திபன், திருபுரசுந்தரி ஜெய்கணேஷ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சம்சுதீன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் பரீத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்