மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

Update: 2022-07-10 21:47 GMT

மேட்டூர்:

மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் கூடிய பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக இதில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று பழைய அனல் மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3, 4-வது யூனிட்களில் நிர்வாக காரணங்களுக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 840 மெகா மின்உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 1-வது யூனிட்டில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது புதிய மற்றும் பழைய அனல் மின் நிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து 1,440 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் இடத்தில் தற்போது 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்