டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கருத்தரங்கம்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கருத்தரங்கம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 'சரியான தேர்வு-ஒளிமயமான எதிர்காலம்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடக்கிறது. இந்த கருத்தரங்கம் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வரும் சதீஷ் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு சிறப்பு பயிற்சி அளிக்கிறார்.
இந்த கருத்தரங்கத்தின் மூலமாக மாணவர்கள் எதிர்கால கல்வி பயணத்தை தேர்வு செய்து தங்களது வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ளவும், மேற்படிப்புகள் மற்றும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை கண்டறியவும் வழிவகுக்கிறது. நிகழ்ச்சியின் முடிவில் இணையவழி வினாடி-வினா போட்டி நடைபெறும். இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்படும்.
https://forms.gle/8fykAFCH8mC3S5gM6 என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தின் மூலமாகவோ அல்லது கியூ ஆர் குறியீட்டை பயன்படுத்தியோ பதிவு செய்து பங்கேற்கலாம்.
கருத்தரங்கத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான லிங்க் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 9443453030, 9043335759 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழிகாட்டுதல்படி துைற தலைவர் பெனோ மேற்பார்வையில் உதவி பேராசிரியர் டார்வின் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.
-----------