மானியங்கள் பெறுவதற்கு இணைய வழி பதிவு கட்டாயம்

மானியங்கள் பெறுவதற்கு இணைய வழி பதிவு கட்டாயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-09 16:54 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் மூலமாக மானியங்கள் பெறுவதற்கு இணைய வழி மூலம் பதிவு செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் http://www.tnhorticulture.tn.gov.in அல்லது tnhortnet/login.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைய வழியில் பதிவு செய்ய தெரியாத விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்