பள்ளி மாணவர்களுக்கு இணையவழி புகைப்படத்தொகுப்பு போட்டி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி புகைப்படத்தொகுப்பு போட்டி நடத்தப்படுகிறது.

Update: 2022-07-12 15:02 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கணினி துறையின் 'கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா' (சி.எஸ்.ஐ.) மாணவர் சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புகைப்படத்தொகுப்பு போட்டியை இணையவழியில் நடத்த உள்ளது. இப்போட்டியில் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு https://forms.gle/4JCpVYig9JlayR4Q7 என்ற இணைப்பின் மூலமாக தங்களது டிஜிட்டல் புகைப்படங்களை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் வருகிற 18-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழானது அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு jensi@drsacoe.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 04639-220740 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி தங்களது திறமையை வளர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கணினித்துறை பேராசிரியர்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்