ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
அம்மாப்பேட்டை அருகே ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை அருகே கள்ளிமேடு கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது39). இவர் கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார் சோழன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சரவணனை பிடித்து, அவரிடம் இருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டு எண்களை பதிவு செய்திருந்த நோட்டு, ரூ.6 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.